சிறப்பான மனநிலையை அடைவது எப்படி?
1.காலைல நேரமா எழுந்து நமக்கே நமக்காக சின்ன சின்ன விஷயம் செய்யணும்.
*உடல்பயிற்சி/நடைப்பயிற்சி/யோகா
*தியானம் ,10-20 நிமிடம்
*மரம்,செடி வளர்த்தல்
*கடவுளுக்கு நன்றி செலுத்துதல்
*காலை உணவு (ரொம்ப முக்கியம்)
*வீடுகிட்ட இருக்கற வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்தல் ஒரு விதமான திருப்தியை தரும்(விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம்)
2. ரிலாக்ஸா இருங்க, வேலைகளை எல்லாம் preplan பண்ணிக்கோங்க.
3.அவசர அவசரமாக வேலைகளை செய்ய வேண்டாமே.
4.புத்தகம் படிங்க ,ஒரு நாளைக்கு 30நிமிடம்.நேரம் இருந்தால் ஒரு மணி நேரம் கூட படிக்கலாம் .என்னை பொறுத்தவரையில், இதைவிட சிறந்தது, நல்ல மனநிலையை அடைய வேறெதுவும் இல்லை.(ebooks முடிந்த அளவு தவிர்த்து சொல்லுங்கள்)
5.சோஷியல் மீடியா - குறைந்த நேரம் மட்டுமே பாருங்க.
6.ஹெல்தியா சாப்பிடுங்க.பிடிச்ச உணவா இருந்தாலும் அளவா சாப்பிடுங்க.
ஒரு மேற்கோள் இருக்கு" YOU ARE WHAT YOU EAT AND WHAT YOU READ"
சிறப்பான மனநிலைக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்ன்னு யோசிக்காதிங்க.சம்மந்தம் இருக்கு..
7.வாரம் ஒரு முறை அல்லது சௌகரியம் பொருத்து கோயில்/ பிடித்த இடத்துக்கு போய்ட்டு வாங்க.
8.எதுக்கும் உணர்ச்சிவசபடாமா , நடக்குறது நடக்கட்டும்ன்னு விட்டுடுங்க.
9.அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்.எதிர்பார்ப்பில்லாத அன்பு காட்டுறது தான் முக்கியம்.
10. நல்லதே நினைங்க,சிரிச்ச முகத்தோடு இருங்க,நல்லதே நடக்கும்.
☺️☺️
கருத்துகள்
கருத்துரையிடுக