இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறு சிறு இன்பங்கள்❤️

  குழந்தைங்க நம்மல பார்த்ததும் விளையாட ஓடி வரதாகட்டும்.. வீட்ல உள்ளவங்க, ஃப்ரெண்ட்ஸ் நமக்கு பிடிச்ச சின்ன சின்ன விஷயத்த பார்த்து செய்யரதாகட்டும்.. நம்ம செய்ததற்காக கிடைக்கும் குட்டி குட்டி பாராட்டுக்கள்.. நம்ம செய்து முடிக்கனும்ன்னு நினைத்தத சரியான நேரத்தில முடிக்கறது..அப்போ வர ஒரு திருப்தி.. இதெல்லாம் நம்ம day to day லைஃப் ல நம்ம கூட டிராவல் பண்ற விஷயங்கள்..இது தான் ஒரு நாள் முடியும்போது ஒரு வித சந்தோஷம் கொடுக்கும்..அந்த நாளை முழுமையானதாக்கும்.. இப்படி எதுமே ஒரு நாள்ல நடக்கமா போனா.. "ச்ச என்ன.. இன்னைக்கு நாள் நல்லாவே போகல", ன்னு தோணும் கண்டிப்பா.. சின்ன சின்ன விஷயம் எல்லாம் ஒன்னு சேர்ந்து தான் பெரிய பெரிய நிறைவு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்குது.. அதனால நமக்கு கிடைக்கற சின்ன சின்ன விஷயத்தையும் நல்லா ரசிச்சு வாழ்வோம்..😊🌸

சிறப்பான மனநிலையை அடைவது எப்படி?

 1.காலைல நேரமா எழுந்து நமக்கே நமக்காக சின்ன சின்ன விஷயம் செய்யணும். *உடல்பயிற்சி/நடைப்பயிற்சி/யோகா *தியானம் ,10-20 நிமிடம் *மரம்,செடி வளர்த்தல் *கடவுளுக்கு நன்றி செலுத்துதல் *காலை உணவு (ரொம்ப முக்கியம்) *வீடுகிட்ட இருக்கற வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்தல் ஒரு விதமான திருப்தியை தரும்(விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம்) 2. ரிலாக்ஸா இருங்க, வேலைகளை எல்லாம் preplan பண்ணிக்கோங்க. 3.அவசர அவசரமாக வேலைகளை செய்ய வேண்டாமே. 4.புத்தகம் படிங்க ,ஒரு நாளைக்கு 30நிமிடம்.நேரம் இருந்தால் ஒரு மணி நேரம் கூட படிக்கலாம் .என்னை பொறுத்தவரையில், இதைவிட சிறந்தது, நல்ல மனநிலையை அடைய வேறெதுவும் இல்லை.(ebooks முடிந்த அளவு தவிர்த்து சொல்லுங்கள்) 5.சோஷியல் மீடியா - குறைந்த நேரம் மட்டுமே பாருங்க. 6.ஹெல்தியா சாப்பிடுங்க.பிடிச்ச உணவா இருந்தாலும் அளவா சாப்பிடுங்க. ஒரு மேற்கோள் இருக்கு" YOU ARE WHAT YOU EAT AND WHAT YOU READ" சிறப்பான மனநிலைக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்ன்னு யோசிக்காதிங்க.சம்மந்தம் இருக்கு.. 7.வாரம் ஒரு முறை அல்லது சௌகரியம் பொருத்து கோயில்/ பிடித்த இடத்துக்கு போய்ட்டு வாங்க. 8.எதுக்கும் ...

பிரிவு!

படம்
 பள்ளிக்கூட நாட்களில் உரசி உரசி நட்பு கொண்டு.., விடுமுறை நாட்களில் பார்க்க கூட முடியாமல் ஏங்குகின்றன.., பேப்பரும் பேனாவும்..