சிறு சிறு இன்பங்கள்❤️
குழந்தைங்க நம்மல பார்த்ததும் விளையாட ஓடி வரதாகட்டும்..
வீட்ல உள்ளவங்க, ஃப்ரெண்ட்ஸ் நமக்கு பிடிச்ச சின்ன சின்ன விஷயத்த பார்த்து செய்யரதாகட்டும்..
நம்ம செய்ததற்காக கிடைக்கும் குட்டி குட்டி பாராட்டுக்கள்..
நம்ம செய்து முடிக்கனும்ன்னு நினைத்தத சரியான நேரத்தில முடிக்கறது..அப்போ வர ஒரு திருப்தி..
இதெல்லாம் நம்ம day to day லைஃப் ல நம்ம கூட டிராவல் பண்ற விஷயங்கள்..இது தான் ஒரு நாள் முடியும்போது ஒரு வித சந்தோஷம் கொடுக்கும்..அந்த நாளை முழுமையானதாக்கும்..
இப்படி எதுமே ஒரு நாள்ல நடக்கமா போனா.. "ச்ச என்ன.. இன்னைக்கு நாள் நல்லாவே போகல", ன்னு தோணும் கண்டிப்பா..
சின்ன சின்ன விஷயம் எல்லாம் ஒன்னு சேர்ந்து தான் பெரிய பெரிய நிறைவு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்குது..
அதனால நமக்கு கிடைக்கற சின்ன சின்ன விஷயத்தையும் நல்லா ரசிச்சு வாழ்வோம்..😊🌸
கருத்துகள்
கருத்துரையிடுக